Friday, May 12, 2017

அட்லி இயக்கும் படத்தில் விஜய்யின் 3 கேரக்டர்கள் இதுதான்


Vijays 3 character updates from Thalapathy 61 movieஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


இதில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், சத்யன், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என விஜய் 3 கேரக்டர்களில் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

முதல் கேரக்டரில் விஜய் ஒரு கிராமத்தில் இருப்பது போன்றும், அது பழைய காலத்து கெட்டப்பில் இருக்கும் என கூறியிருந்தோம். இவருக்கு ஜோடி நித்யா மேனன்.

அந்த கேரக்டருன்தான் எஸ்ஜே சூர்யா டாக்ராக நடித்திருந்தார்.

இதனையடுத்து மற்றொரு விஜய் டாக்டராவும் அவருக்கு ஜோடியான காஜலும் டாக்டராக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் 3வது விஜய் கேரக்டர் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இந்த கேரக்டர் மாயஜாலங்கள் செய்யும் ஒரு மேஜிக் மேனாக வருகிறாராம்.

இந்த கேரக்டர்தான் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment