Wednesday, May 10, 2017

'பாகுபலி-2'வை பார்க்க க்யூவில் நின்ற பாகிஸ்தான் ரசிகர்கள்..!


'பாகுபலி-2'வை பார்க்க க்யூவில் நின்ற பாகிஸ்தான் ரசிகர்கள்..!



10 மே,2017 - 15:06 IST






எழுத்தின் அளவு:








பாகுபலி-2' படம் வெளியாந சில நாட்களிலேயே பாகிஸ்தான் ரசிகர்களிடமும் அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் 'பாகுபலி-2'வை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்... ஆனால் இதற்கு முன்பு சில பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் திரையிட எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியில் 'பாகுபலி-2'வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்தார்..

இந்நிலையில் பாகிஸ்தானில் 'பாகுபலி-2' ரிலீஸாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் 'பாகுபலி-2'வை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் க்யூ வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்வதை ஒரு பாகிஸ்தான் ரசிகர் படம் பிடித்து போட்டுள்ளார். குறிப்பாக லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம் 'பாகுபலி-2'.


0 comments:

Post a Comment