என் மனைவிக்கு என் மீது கோபம் - இசையமைப்பாளர் டி.இமான்
11 மே,2017 - 12:26 IST
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். பல வருடங்களாக போராடி வந்த அவர் பிரபுசாலமனின் மைனா படத்திற்கு பிறகுதான் பேசப்படும் இசையமைப்பாளரானார். அதில் இருந்து தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில் எனது மனைவிக்கு என் மீது ரொம்ப கோபம் என்கிறார் டி.இமான்.
என்ன காரணம் என்று அவரைக்கேட்டால், நான் எனது இசைக்கூடாரத்திற்குள் நுழைந்து விட்டால், அதன்பிறகு எனது மனைவிக்கு ஒரு போன்கால் கூட செய்வதில்லை. அதேசமயம், எனது இசையில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் யுகபாரதியை அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்டு பேசுவேன். அவர் பாடலாசிரியர் மட்டுமின்றி, எனது ஆத்மார்த்தமான நண்பரும்கூட. அதனால் அவருடன் நிறைய விசயங்களை ஷேர் பண்ணிக்கொள்கிறேன்.
அதனால் எனது மொபைலில் யுகபாரதிக்கு நான் அடிக்கடி போன் செய்திருப்பதை கவனிக்கும் எனது மனைவி, எனக்கு ஒரு போன் பண்ண நேரமில்லை. யுகபாரதிக்கு பேச மட்டும் நேரம் இருக்கிறதோ? என்று உரிமையோடு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்கிறார் டி.இமான்.
0 comments:
Post a Comment