அமீர்கானுடன் மீண்டும் இணையும் கத்ரீனா கைப்
12 மே,2017 - 16:02 IST
தங்கல் படத்திற்கு பிறகு அமீர்கான் ஹீரோவாக நடிக்க உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா சாகிக்ப்பும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஹீரோயின் முடிவாகி இருக்கிறது. தூம்-3யில் அமீர்கான் உடன் நடித்த கத்ரீனா கைப்பே இதிலும் நடிக்க உள்ளார். இதை அமீர்கானும் உறுதி செய்துள்ளார்.
இதுப்பற்றி அமீர்கான் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "கடைசியாக எங்களுடைய படத்திற்கு கத்ரீனா முடிவாகிவிட்டார், வரவேற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் ஷூட்டிங் ஜூன் 1-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment