நானா படேகரின் படத்தை துவக்கி வைத்த கஜோல்
10 மே,2017 - 16:07 IST
பெயரிடப்படாத மராத்தி படம் ஒன்றை சமீபத்தில் நடிகை கஜோல் துவக்கி வைத்தார். த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட உள்ள இப்படத்தின் வேலைகள் மே 7 ம் தேதி துவங்கப்பட்டது. பெயரிடப்படாத இந்த மராத்தி படத்தில் நானா படேகர், சுமீத் ராகவன், நடிகை இராவதி ஹர்சே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்களாம். சதீஷ் ராஜ்வாடே இயக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ், அபினவ் சுக்லா மற்றும் மணிஷ் மிஸ்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வாட்கர்கேட் மோஷன் பிக்சர்ஸ், ஸ்ரீ கஜானனம் சித்ரா இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளனர்.
0 comments:
Post a Comment