Friday, May 12, 2017

பெயர் வைக்கும் முன்பே விலைபோன பாலகிருஷ்ணா பட சாட்டிலைட் ரைட்ஸ்..!


பெயர் வைக்கும் முன்பே விலைபோன பாலகிருஷ்ணா பட சாட்டிலைட் ரைட்ஸ்..!



12 மே,2017 - 15:10 IST






எழுத்தின் அளவு:








தனது திரையுலக வாழ்வில் சதமடித்துவிட்ட பாலகிருஷ்ணா தனது 1௦1வது படத்தை இயக்கும் பொறுப்பை பூரி ஜெகன்நாத்திடம் ஒப்படைத்தார். படம் முடிவடைந்து, பாலகிருஷ்ணாவும் டப்பிங் கூட பேசிவிட்டார்.. ஆனால் இந்தப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவே இல்லை.. அதைவிட விஷேசம் இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் ஆந்திராவின் பொழுதுபோக்கு சேனல் ஒன்று, சுமார் 6.5 கோடி ரூபாய் கொடுத்து இந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றியுள்ளதாம்..

இத்தனைக்கும் பாலகிருஷ்ணாவின் 1௦௦வது படமான 'கௌதமி புத்ர சடகர்னி' படம் கூட பெரிய அளவில் போகவில்லை. பூரி ஜெகன்நாத் இயக்கிய முந்தைய படமும் இதே ரிசல்ட் தான். தவிர இந்த இரண்டு படங்களுமே சேனலில் ஒளிபரப்பப்பட்டபோது டி.ஆர்.பி ரேட்டிங்கும் பெரிதாக ஏறவில்லை. இந்தநிலையில் இன்னும் டைட்டில், பர்ஸ்ட் லுக், டீசர் என எதுவும் வெளியாகாத நிலையில் இவ்வளவு விலைகொடுத்து பாலையா படத்தை ரிஸ்க் எடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்றால், அதுதான் பாலைய்யாவின் மேஜிக் என்பார்கள் அவரது ரசிகர்கள்.. .


0 comments:

Post a Comment