மீண்டும் பிருத்விராஜ் படத்தையே இயக்க முடிவுசெய்த அஞ்சலி மேனன்..!
12 மே,2017 - 15:05 IST
அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசியம் செய்த 'பெங்களூர் டேய்ஸ்' படம் வெளியாகி வரும் மே-3௦ வந்தால் மூன்று வருடங்கள் முடியப்போகிறது.. வெள்ளி விழா கொண்டாடிய படம், வசூலை வாரிகுவித்த படம் என பல சாதனைகளுக்கு சொந்தமான அந்தப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இன்னும் தனது அடுத்த படத்தை இயக்குவது பற்றிய அறிவிப்பை கூட வெளியிடாதது தான் மிகப்பெரிய ஆச்சர்யம் தருகிறது. வேறொரு இயக்குனராக இருந்தால் இந்த மூன்று வருடங்களில் மூன்று படங்களை இயக்கியிருப்பார்கள்.. ஹிட் கொடுக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் லைப்பில் செட்டில் ஆகியிருப்பார்கள்.
ஆனால் அஞ்சலி மேனன் தனது அடுத்த படத்தை இயக்க இன்னும் நிதானம் காட்டுவது ஏன் என்றுதான் பலரும் புரியாமல் தவிக்கின்றனர்.. கடந்த வருடம் பிரதாப் போத்தன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக முடிவு செய்யப்பட்ட படத்திற்கு அஞ்சலி மேனன்தான் கதை எழுதுவதாக சொல்லப்பட்டது.. ஆனால் பின்னர் பிரதாப் போத்தன், அஞ்சலி எழுதிய கதை ரொம்பவும் சாதாரணமானக் இருக்கிறது என அந்தப்படத்தையே ட்ராப் பண்ணிவிட்டார்.. அதனால் துல்கர் சல்மானை வைத்து அந்த கதையை அஞ்சலி மேனனே டைரக்ட் செய்வார் என சொல்லப்பட்டது.. அந்த திட்டத்திலும் முன்னேற்றம் எதுவும் இல்லை..
இப்போது பிருத்விராஜை வைத்து தனது புதிய படத்தை அஞ்சலி மேனன் இயக்கவுள்ளார் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட்டும் தயார் எனவும் சொல்லப்படுகிறது.. ஏற்கனவே பிருத்விராஜ் நடித்த 'மஞ்சாடிக்குறு' படம் மூலமாகத்தான் அஞ்சலி மேனன் டைரக்டர் ஆனார் என்பதால் பிருத்விராஜ் கால்ஷீட் கிடைப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் தொடர் பிசி ஷெட்யூலில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் பிருத்விராஜ், அஞ்சலி மேனன் படத்திற்கு இந்த வருடத்திற்குள் கால்ஷீட் ஒதுக்க முடியுமா என்றால் அது கொஞ்சம் சிரமம் தான்.
0 comments:
Post a Comment