Thursday, May 11, 2017

சல்மானை இயக்க விரும்பும் ரோகித் ஷெட்டி


சல்மானை இயக்க விரும்பும் ரோகித் ஷெட்டி



11 மே,2017 - 18:12 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவருக்கு சல்மான் கானை வைத்து படம் இயக்க ஆசையாம். கேத்ரான் கீ கில்லாடி சீசன்-8 நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ரோகித் ஷெட்டி, "எனக்கு சல்மானை வைத்து படம் இயக்க ஆசை. நான் பொய் சொல்லவில்லை, உண்மையை தான் சொல்கிறேன். நல்ல கதை அமைந்தால் நிச்சயம் அவரை வைத்து படம் இயக்குவேன்" என்று கூறியுள்ளார்.

சல்மானை வைத்து ரோகித் படம் இயக்கவில்லை என்றாலும் அவரை வைத்து பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புரொமோஷன் வீடியோவை இயக்கியுள்ளார். தற்போது ரோகித், கோல்மால் அகைன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.


0 comments:

Post a Comment