திருட்டு பயலே-2வில் நடிக்கிறார் அமலாபால்
31 அக்,2016 - 12:50 IST

10 வருடங்களுக்கு முன்பு சுசிகணேசன் இயக்கிய படம் திருட்டுப்பயலே. ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, நடித்திருந்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார், இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுசி.கணேசன். முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. பாபிசிம்ஹா, பிரசன்னா, நடிக்கிறார்கள். இதில் பாபிசிம்ஹா ஜீவன் நடித்த கேரக்டரிலும் பிரசன்னா அப்பாஸ் நடித்த கேரக்டரிலும் நடிக்கிறார்கள். சோனியா அகர்வால் கேரக்டரில் அமலாபால் நடிக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
திருட்டுப் பயலோ கொஞ்சம் வில்லங்கமான கதை. அதில் எப்படி அமலாபால் நடிப்பார் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். ஏற்கெனவே சிந்து சமவெளி என்ற வில்லங்க படத்தில் நடித்தவர்தான் அமலாபால்.
0 comments:
Post a Comment