அமெரிக்காவில் கார் விபத்தில் கங்கனா காயம்
16 அக்,2016 - 12:17 IST

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில், நடிகை கங்கனா ரணாவத், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 29; ஏராளமான ஹிந்தி படங்களிலும், தாம் தூம் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தற்போது, சிம்ரன் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, அமெரிக்காவில் நடக்கிறது. இதற்காக, அமெரிக்காவுக்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில், ஜார்ஜியா பகுதியில் நடந்த படப்பிடிப்பு முடிந்தபின், தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.
அதே காரில், படப்பிடிப்பு குழுவினரும் சென்றனர். கார் வேகமாக சென்ற போது, டிரைவருக்கு திடீரென இருமல் ஏற்பட்டது. இதனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாக சென்று, தடுப்பு வேலியின் மீது மோதி நின்றது. இதில், கங்கனா உட்பட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின், கங்கனாவும், மற்றவர்களும், ஓட்டலுக்கு திரும்பினர்.
0 comments:
Post a Comment