Monday, October 17, 2016

ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய சூர்யா!









ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய சூர்யா!



17 அக்,2016 - 15:50 IST






எழுத்தின் அளவு:








ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்தபோதெல்லாம் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அது விஜய், அஜித்தின் ஆரம்ப காலத்திலும் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி விட்டது. ரசிகர்களை சந்திக்க யாருமே நேரம் ஒதுக்குவதில்லை. தங்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை டுவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள். ஆக, இணையதளம்தான் நடிகர்களுக்கும், ரசிகர்களுக்குமான நட்பு பாலமாக இருக்கிறது.

அதேசமயம் சில நடிகர்கள் படப்பிடிப்புக்கு அவுட்டோர் செல்லும்போது தங்களை காண ஆவலுடன் வரும் ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள். இதில் சூர்யா முதலிடம் பிடிக்கிறார். சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு, ஆந்திரா, தமிழ்நாடு, மலேசியா என பல லொகேசன்களில் நடைபெற்றபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர் ரசிகைகளிடம் அவ்வப்போது சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை சந்தோசப்படுத்தினாராம். சில நாட்களில் படப்பிடிப்பு இல்லாதபோது ரசிகர்களிடம் அன்போடு உரையாடியும் மகிழ்ந்திருக்கிறார் சூர்யா.




Advertisement








கால்வலியை பொருட்படுத்தாமல் நடித்தார் ராம்! -மிஷ்கின்கால்வலியை பொருட்படுத்தாமல் ... ஒரு கோடி கேட்ட நடிகை ஒரு கோடி கேட்ட நடிகை






0 comments:

Post a Comment