Saturday, December 24, 2016

‘தல-தளபதி’யை தொடர்ந்து சிம்புவின் நியூ இயர் ட்ரீட்

Simbu Yuvan2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.


இதனால் புதிய வருடம் பிறக்கும் அன்றே தங்கள் அபிமான நடிகரின் படங்களை பார்க்க உள்ள சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.


இவர்களைத் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு நியூ இயர் அன்று விருந்து வைக்க உள்ளார் சிம்பு.


சிம்பு நடித்துள்ள “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் உள்ள ட்ரெண்ட் பாட்டை அன்று வெளியிட இருக்கிறார்களாம்.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.


நாயகிகளாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இந்த 2016ஆம் ஆண்டு பிறந்த தினம் அன்று தள்ளிப்போகாதே என்ற பாடலை வெளியிட்டார் சிம்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment