Friday, December 23, 2016

அஜித் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? – அதிரடி காட்டும் நடிகர் சுவாமிநாதன்


நடிகர்கள் பலரும் தங்களது படங்களில் நல்லவர்களாகவோ, வில்லனாகவோ நடிப்பதுண்டு. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படி பட்டவர்கள் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு எப்போதும் இருக்கும்.


நடிகர் அஜித் நடிக்கும் படங்களை ரசிப்பவர்களைவிட அவரது குணங்களை ரசிப்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.


சமீபத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் நடித்த மணல் கயிறு படம் இன்று ரிலீஸ் ஆனது. தற்போது இதில் நடித்துள்ள நகைசுவை நடிகர் சுவாமிநாதன் பேட்டி கொடுத்துள்ளார்.


அவர் கூறியதாவது நான் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. அதே ஆர்வத்தோடு தான் இன்றும் நடிக்கிறேன்.


பலருடன் நடித்திருக்கிறேன். ஆனால் இன்று என்னோடு எப்போதும் போல இன்றும் சகஜமாக பழகுபவர்கள் எஸ்.வி.சேகர், அஜித், சந்தானம் மட்டுமே.


அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்துள்ளேன். வேதாளம் படத்தில் நடித்தேன்.


படத்தின் போது அவர் தானே பிரியாணி தயார் செய்து எல்லோருக்கும் பரிமாறுவார். முன் கூட்டியே சொல்லிவிடுவார். சமையல் பொருட்கள் தயாராக இருக்கும். அவர் தன உதவியாளர் சக்தியை மட்டும் சமையல் செய்யும் போது அருகில் வைத்துக்கொள்ளுவார்.


30 பேர் சாப்பிடும் அளவுக்கு பிரியாணியை பார்த்து பார்த்து செய்து எல்லோருக்கும் கொடுப்பார். அவர் எப்போதும் எங்களிடமே இருப்பார்.


கேரவனுக்குள் இருக்கமாட்டார். நாங்கள் டீ குடிக்கும் போது எங்களோடு சேர்ந்து குடிப்பார். யூனிட்டில் இருக்கும் அனைவரையும் விசாரிப்பார். வெளிநாட்டு ஷூட்டிங் போனால் வீடு போனே போட்டு பேசுனீங்களா என கேட்பார்.


அவருடன் இருக்கும் பாகுபாடு கிடையாது. குடும்பத்தவர்கள் போல இருக்கும். மிக நெருங்கி பழகும் போது ஆச்சர்யமாக இருக்கும்.


எல்லோருக்கும் கொடுத்தே சாப்பிடுவார் . சாமி சார் பிரியாணி என என்னையும் கேட்பார். உடனே நான் சார் நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என தெரிவித்து விடுவேன்.


தல 57 படத்திலும் அவரோடு நடிக்கிறேன் எனக்கூறி பெருமைப்பட்டார்.






More


















0 comments:

Post a Comment