நேபாள மன்னரின் வாரிசு அவர். சினிமாவிற்கு அவர் வந்த புதிதில் இளவரசி என்றுதான் இயக்குனர்கள் அழைப்பார்கள்.
அவர் மணீஷா கொய்ராலா. கமலே, இவர் போல ஒரு அழகியும், இளகிய மனம் கொண்டவரையும் நான் சந்தித்ததே இல்லை என்று புகழ்ந்தார்.
மணிரத்தினம் பம்பாய் படத்தில் இவரின் இயல்பான நடிப்பை மிகவும் பாராட்டினார். இப்படி ஒரு மதிப்பிற்குரிய அந்த நடிகைக்கு இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம்’ புகை பிடிப்பது என்கிறார்கள். ஒரு நாளைக்கு இருபது சிகரெட் வரை ஊதித் தள்ளுவாராம்.
கேன்சர் நோய் பாதிப்பை நியூயார்க் டாக்டர்கள் கண்டறியும் முன்னர் உடல் நலம் குறித்து யோசித்து பார்த்ததே இல்லை.
பல படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளேன். அதனால் அந்தப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது.
நோயோடு போராடிய போதுதான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
கேன்சரால் மரணத்தின் விளிம்பில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்ததால் ‘கேன்சரை வென்ற நடிகை’ என்று பலரும் என்னைப் பார்ப்பதை முறியடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.
சினிமா உள்பட ஊடகங்கள் கேன்சர் என்பது மரணத்தை நோக்கி தள்ளும் கொடிய நோய் என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது.
மற்ற நோய்களைப் போலவே கேன்சரும் குணமாக்க கூடிய நோய்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மனிஷா.
இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் தற்போது அவர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி இலக்கிய மாநாட்டின் போது கேன்சர் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.
‘உடலை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோய் வரும் முன்னரே அனைவரும் உணர்ந்து வாழவேண்டும்’ என்பது மணீஷாவின் அறிவுரை.
More
0 comments:
Post a Comment