பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து படம் பார்த்த தன்யா!
24 டிச,2016 - 10:20 IST

சசிகுமார், கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் பலே வெள்ளையத்தேவா. சோலை பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் காதலிக்க நேரமில்லை பட நாயகன் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். கிராமத்து கதை சூழலில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனிக்கொடி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் தன்யா.
இந்த படத்திற்கான டப்பிங் பேச சென்றபோது, தான் நடித்துள்ள காட்சிகளை மட்டுமே பார்த்த தன்யாவுக்கு முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக, நேற்று பலே வெள்ளையத்தேவா படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது, தனது அம்மாவுடன் வந்து தானும் படம் பார்த்தார் தன்யா. அப்போது படத்தில் தனக்கு பிடித்தமான காட்சிகள் வந்தபோது கைதட்டி ரசித்தபடி பார்த்த அவர், படம் ஓடி முடித்த பிறகு கடைசி டைட்டில் கார்டு ஓடி முடியும் வரை இருக்கையில் அமர்ந்து உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment