அஜித் யூனிட்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல்அகர்வால்!
24 டிச,2016 - 10:35 IST

தற்போதைய முன்னணி நடிகைகளைப் பொறுத்தவரை அஜித்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். வளர்ந்து வரும் நடிகைகளோ, அவர் படத்தில் தங்கை வேடத்திலாவது நடித்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தபோது, அஜித்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் காஜல்அகர்வால். ஆனால் அவர் இதோ கிடைத்து விடும் என்று நினைத்த நேரத்தில் கிடைக்காத அஜித் பட வாய்ப்பு, இனிமேல் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த நேரம் பார்த்து காஜல் வீட்டு கதவை தட்டியது. அதுவும் அனுஷ்காவின் கால்சீட் குறித்த நேரத்தில் கிடைக்காததால் அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பினை பெற்றார் காஜல்அகர்வால்.
அதையடுத்து, அஜித்தின் 57வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவா கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுத்து பல்கேரியாவுக்கு பறந்தார் காஜல் அகர்வால். பெரும்பாலும், படப்பிடிப்பு தளங்களில் கேரவனுக்குள் சென்று விட்டால் அவரை வெளியே கொண்டு வருவதற்குள் உதவி இயக்குனர்கள் படாதபாடு படுவார்கள். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், உதவி இயக்குனர்கள் கேரவன் கதவை தட்டியதுமே வெளியே வந்து நடித்தாராம் காஜல். சில நாட்களில் பல்கேரியாவில் பலத்த குளிர் அடித்தபோதும்கூட, முதல் ஆளாக கேமரா முன்பு வந்து நின்று நடித்துக்கொடுத்தாராம் காஜல்அகர்வால். அஜித் படத்துக்கு அவர் கொடுத்த இந்த முக்கியத்துவத்தை அப்பட யூனிட்டில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.
0 comments:
Post a Comment