சாதனைகளை ஆரம்பித்த சிரஞ்சீவி
11 ஜன,2017 - 15:32 IST

9 வருடங்கள் கழித்து 'கைதி நம்பர் 150' படம் மூலம் மீண்டும் வந்துள்ள சிரஞ்சீவி பல புதிய சாதனைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு அற்புதமான ஓபனிங் கிடைத்துள்ளதாம்.
அமெரிக்காவில் மட்டும் பிரிமீயர் காட்சிகள் மூலம் நேற்று மட்டும் சுமார் 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் முழுமையான கணக்குகள் வராத நிலையில் இந்தத் தொகை மேலும் அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள்.
61 வயதில் சிரஞ்சீவி நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடைய தோற்றமும், நடனமும், சண்டையும் 30 வயது இளைஞர் போல உள்ளதாக அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இன்றைய இளம் ஹீரோக்களுக்கும் சவால் விடும் விதத்தில் அவருடைய நடிப்பு இருப்பதாக விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
பாலகிருஷ்ணாவின் 'கௌதமி புத்ர சட்டகர்னி' படம் சிரஞ்சீவி படத்திற்குப் பலமான போட்டியாக இருந்தாலும் வசூலில் சிரஞ்சீவி தனிப் பெரும் சாதனையை நிகழ்த்துவார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment