Monday, February 20, 2017

பிளாஷ்பேக்: 500 ரூபாய் செலவில் நடந்த சிவாஜி திருமணம்


பிளாஷ்பேக்: 500 ரூபாய் செலவில் நடந்த சிவாஜி திருமணம்



20 பிப்,2017 - 13:07 IST






எழுத்தின் அளவு:








நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் அக்கா மகள் கமலாவை திருமணம் செய்து கொண்டு கடைசி வரை கருத்தொருமிக்க கணவன் மனைவியாக வாழ்ந்தார். தினமும் படப்பிடிப்புக்கு செல்லுபோது கமலா அம்மாளை தன் முன்னால் வரச்சொல்லி அந்த மங்களகரமான முகத்தை பார்த்து விட்டுச் செல்வார். வீட்டில் இருந்தால் மூச்சுக்க முன்னூறு முறை கமலா கமலா... என்று தான் அழைப்பார்.

அவர், கமலா அம்மாளை திருமணம் செய்து கொண்டது 1952ம் ஆண்டு மே 1ந் தேதி. பெரியவர்களாக பார்த்து முடிவு செய்த திருமணம்தான் ஆனாலும் சிவாஜியின் அக்கா கமலா பிறந்தபோது கமலா என் தம்பி கணேசனுக்குத்தான் என்று சொல்லியே வளர்த்தார். சிவாஜி, கமலா அம்மாள் திருமணம் கும்பகோணம் மாவட்டம் சுவாமி மலையில் நடந்தது. அப்போது அவர் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

கோவிலில் நடந்த இந்த திருமணத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், ராம அரங்கண்ணனல், டி.ஏ.மதுரம், சகஸ்ரநாமம், டைரக்டர் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர். தமிழ் முறைப்படி திருக்குறள் ஓதி திருமணம் நடந்தது. கண்ணதாசன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் உள்ளூர் ஓட்டலில் இருந்த 100 பேருக்கு சாப்பாடு கொண்டு வரப்பட்டு கல்யாண விருந்து நடந்தது. அன்றைய திருமண செலவு 500 ரூபாய்.


0 comments:

Post a Comment