Monday, February 20, 2017

விருதுக்காக படம் இயக்க மாட்டேன் - அர்பாஸ்கான்


விருதுக்காக படம் இயக்க மாட்டேன் - அர்பாஸ்கான்



20 பிப்,2017 - 15:40 IST






எழுத்தின் அளவு:








விருதுக்காக நான் என்றும் படம் இயக்க மாட்டேன் என அர்பாஸ்கான் கூறியுள்ளார். நடிகர் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர், அடுத்தப்படியாக தபாங்-3யை இயக்க உள்ளார். இதுதவிர சில படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த மாதிரி படம் இயக்க ஆசை என்று கேட்டபோது, அர்பாஸ் பதிலளித்தாவது...

‛‛ஒரு இயக்குநராக நான், வழக்கமாக அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கதையை தான் இயக்குவேன். விருதுக்காக நான் என்றும் படம் இயக்க மாட்டேன். அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை ரசித்தாலே போதும், அதுவே விருது படமாக கூட மாறலாம்'' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment