வன்முறையை தூண்டுவதாக கமல் மீது புகார்
20 பிப்,2017 - 16:26 IST

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு வன்முறையை தூண்டுவதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறர். அதிலும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த அன்று, ‛‛மக்கள் தங்களின் தொகுதி எம்எல்ஏ.க்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்பு கொடுங்கள், உங்களின் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் அனுப்புங்கள்'' என்று கவர்னரின் இ-மெயில் முகவரியையும் பதிவிட்டிருந்தார்.
கமலின் இந்த பதிவு அதிமுக., அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக உள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் கருத்தினை பதிவிட்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment