ராணாவின் காஸி படம் பார்க்க விரும்பும் தெலுங்கானா அமைச்சர்
20 பிப்,2017 - 14:58 IST

ராணா மற்றும் டாப்ஸி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காஸி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்திய கப்பற்படையில் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை தழுவி இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கிய இப்படத்தை பார்க்க விரும்புவதாக தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி ராமா ராவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ராணிவின் காஸி திரைப்படத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள ராமா ராவ், இப்படத்தில் ராணாவின் நடிப்பு குறித்த நேர்மறையான விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராணா, ராமா ராவ் இப்படத்தை எப்போது பார்க்க வேண்டும் என தெரிவித்தால் தகுந்த ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறியுள்ளார்.
மகேஷ் பாபு, ராம் சரண், ராணா போன்ற டோலிவுட் பிரபலங்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவர் அமைச்சர் ராமா ராவ். இவர்களின் அழைப்பை ஏற்று திரைப்பட விழாக்களில் ராமா ராவ் கலந்து கொண்டுள்ளார். மேலும் ராம் சரண், சானியா மிர்சா மற்றும் பலர் இணைந்து நடத்திய மாரத்தான் போட்டியிலும் ராமா ராவ் கலந்துகொண்டார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment