மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸாவதில் சிக்கல்
13 பிப்,2017 - 16:01 IST

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி உள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி செளத்ரி தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது. வருகிற 17-ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது.
ஆனால், மொட்ட சிவா கெட்ட சிவா பட வெளியீட்டிற்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா வாங்கி இருக்கின்ற நீதிமன்ற தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் மதனும், டாக்டர்.சிவபாலனும் கடுமையாக முயன்று வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முறையிட்டு படத்திற்கான தடையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அன்றையை நீதிபதி ஏற்கவில்லை. எனவே இன்று வேறு ஒரு நீதிபதியிடம் அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர் அந்த வழக்கின் தன்மையை பார்த்துவிட்டு இது ஒன்றும் அவசர வழக்கு கிடையாது. இதை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார். எனவே மொட்ட சிவா கெட்ட சிவா படம் வருகின்ற 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment