Monday, February 13, 2017

பிரபாஸின் அடுத்த படம் தமிழிலும்...


பிரபாஸின் அடுத்த படம் தமிழிலும்...



13 பிப்,2017 - 16:32 IST






எழுத்தின் அளவு:








தெலுங்குத் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸ் வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களில் நடித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. 2013ம் ஆண்டில் வெளிவந்த 'மிர்ச்சி' படம்தான் பிரபாஸ் கடைசியாக நடித்த ஒரு கமர்ஷியல் படம். அதன் பின் 'பாகுபலி' படத்தில் நடிக்க தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முதல் பாகம், இரண்டாம் பாகம் என கடந்த நான்கு வருடங்களாக 'பாகுபலி' படத்திலேயே மூழ்கிக் கிடந்தார்.

'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பழையபடி வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களில் நடிக்க அவர் முடிவெடுத்தார். அதற்காக கடந்த சில மாதங்களாகவே கதைகளைக் கேட்டு வந்தார். இன்று அவருடைய 19வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தை 'ரன் ராஜா ரன்' படத்தை இயக்கிய சுஜித் இயக்குகிறார்.

சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளார்களாம். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகராக இருந்த பிரபாஸ் இந்திய நடிகராக உயர்ந்ததே அதற்குக் காரணம்.


0 comments:

Post a Comment