Monday, February 13, 2017

நாகார்ஜுனாவை முந்திய சூர்யா


நாகார்ஜுனாவை முந்திய சூர்யா



13 பிப்,2017 - 16:39 IST






எழுத்தின் அளவு:








தமிழில் கடந்த வாரம் சூர்யா நடித்த 'சி 3' படத்திற்குப் போட்டியாக வேறு எந்த படமும் இல்லாமல் போனது. இருந்தாலும் அரசியல் நிலவரம் காரணமாக மிகப் பெரிய வசூலை இந்தப் படம் வசூலிக்கவில்லை என்றாலும் மோசமான வசூலாக இல்லாமல் இருந்தது. முதல் நாளில் சுமார் 17 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்த 'சி 3' படம் நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியில் எப்படியும் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.

தமிழை விட தெலுங்கில் படத்திற்கு அதிக வரவேற்பிருப்பதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அங்கு நாகார்ஜுனா நடித்து வெளிவந்த 'ஓம் நமோ வெங்கடேசா' படம் 'சி 3' படத்திற்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'சி 3' படம் வரவேற்பிலும், வசூலிலும் 'ஓம் நமோ வெங்கடேசா' படத்தை முந்திவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

சூர்யாவிற்கு தெலுங்கிலும் தனி வரவேற்பு உண்டு. 'சி 3' படத்தைப் பொறுத்தவரையில் விசாகப்பட்டிணம்தான் படத்தின் கதைக்களம் என்பதால் அவர்கள் ஒரு டப்பிங் படத்தைப் பார்க்காமல் ஒரு நேரடித் தெலுங்குப் படத்தைப் பார்க்கும் உணர்வே ரசிகர்களுக்கு ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். அதனால், இந்த வாரத்திலும் படத்திற்கு நல்ல வசூல் இருக்கலாம் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment