இந்திய சினிமா உன்னை மறக்காது - கமல்
13 பிப்,2017 - 16:53 IST

இந்திய சினிமா உன்னை மறக்காது என்று நடிகர் கமல்ஹாசன், பாலுமகேந்திராவை நினைவு கூர்ந்துள்ளார். தனது தனித்துவமான ஒளிப்பதிவால் ரசிகர்களை மிளிர செய்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாது அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, வீடு, ரெட்டை வால் குருவி, சதி லீலாவதி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக தலைமுறைகள் என்ற படத்தை இயக்கியதோடு, அதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவும் செய்தார். 2014-ம் ஆண்டு பிப்.,13ம் தேதி இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
மரணத்தைத் தொடும் மணித்துளி வரை சினிமாவை மட்டுமே சுவாசித்த மாபெரும் திரைக்கலைஞன் பாலு மகேந்திரா நினைவுநாள் இன்று. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார். அதில், ‛‛இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். இந்திய சினிமா உனை மறவாது தமிழா'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment