Wednesday, February 15, 2017

மஞ்சுவை ஹீரோயின் ஆக்கியதால் திலீப் சங்கடப்பட மாட்டார்” ; இயக்குனர் கமல்..!


மஞ்சுவை ஹீரோயின் ஆக்கியதால் திலீப் சங்கடப்பட மாட்டார்” ; இயக்குனர் கமல்..!



15 பிப்,2017 - 16:08 IST






எழுத்தின் அளவு:








பிரபல மலையாள இயக்குனர் கமலும் நடிகர் திலீப்பும் நீண்ட வருட நண்பர்கள்.. திலீப்பை வைத்து பல படங்களை கமல் இயக்கியுள்ளார். சமீபத்தில் திலீப், காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டபோது கூட முதல் ஆளாக வந்து வாழ்த்தினார் கமல்.. இந்தநிலையில்தான், கமல் அடுத்ததாக தான் இயக்கவுள்ள 'ஆமி' படத்திற்கு திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியாரை ஒப்பந்தம் செய்துள்ளது திலீப் தரப்பினரை புருவம் உயர்த்த வைத்துள்ளது..

ஆம்.. மறைந்த பிரபல எழுத்தளார் கமலா சுரையா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை 'ஆமி' என்கிற பெயரில் படமாக இயக்கும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் கமல்.. இந்தப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட பாலிவுட் நடிகை வித்யாபாலன் தற்போது சில காரணங்களால் தன்னால் நடிக்க முடியாது என ஒதுங்கிவிட்டார். அதன்பின்னர்தான் அந்த கேரக்டருக்கு மஞ்சு வாரியார் சரியாக இருப்பார் என ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்.. “சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு என பிரித்து பார்க்க தெரிந்தவர் திலீப். அதனால் மஞ்சு வாரியாரை என் படத்திற்கு ஒப்பந்தம் செய்தது குறித்து சங்கடப்பட கூடிய ஆளும் அல்ல அவர்” என கூறியுள்ளார் கமல்.


0 comments:

Post a Comment