தமிழக அரசியல் களத்தை பிரதிபலிக்கிறதா லிபர்ட்டி பஷீரின் நிலைமை..!
13 பிப்,2017 - 15:19 IST

மலையாள தியேட்டர்கள் கூட்டமைப்பின் தலைவர் என்கிற முறையில் சினிமா இண்டஸ்ட்ரிக்கு மட்டும் தெரிந்த நபராக இருந்த லிபர்ட்டி பஷீர் என்பவர் இன்று மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பாப்புலராகிவிட்டார்.. ஆனால் அதெல்லாம் அவரது நல்ல செயல்களால் அல்ல.. எதேச்சதிகார போக்கை கடைபிடித்து அதனால் இன்று செல்லாக்காசாக ஆகியிருக்கும் லிபர்ட்டி பஷீர் பற்றி நாமும் கடந்த இரண்டு மாதங்களில் அவ்வப்போது கூறி வந்துள்ளோம்..
தியேட்டர்களுக்கு சரிபங்கு லாபம் தரவேண்டும் என போர்க்கொடி தூக்கிய லிபர்ட்டி பஷீர், தான் தலைவர் என்கிற அகங்காரத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து ஜனவரி 17 வரை கேரள தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிட விடாமல் முடக்கினார்.. ஆனால் நடிகர் திலீப் மூலமாக தற்போது புதிய கூட்டமைப்பு உருவாகவே, லிபர்ட்டி பஷீரின் கூடாரத்தில் இருந்து 90 சதவீதம் பேர் திலீப் பக்கம் சாய்ந்துவிட்டனர்..
0 comments:
Post a Comment