அமலாபாலின் காதலர் தின கொண்டாட்டம்!
15 பிப்,2017 - 10:01 IST

காதலுக்கு இன்னமும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், உலகமெங்கிலும் பிப்ர வரி 14-ந்தேதியை காதலர் தினமாக இளைஞர் -இளைஞிகள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்றைய தினம் பல கோலிவுட் காதலர்கள் காதலர் தினத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதோடு, டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை பிரிந்த நடிகை அமலாபாலும் காதலர் தினத்தை தான் கொண்டாடியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதைப்பார்த்து, டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால் இப்போது அவரை பிரிந்து விட்டார். இருப்பினும், நேற்று காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறார் அமலாபால். ஆனால் புதிய காதலருடன் அவர் கொண்டாடவில்லை. அப்பா, அம்மா, தம்பி என தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார் அமலாபால்.
0 comments:
Post a Comment