மோகன்லால் படத்தில் அதர்வா பட நாயகிக்கு வாய்ப்பு..!
14 பிப்,2017 - 17:57 IST

கடந்த 2013ல் இந்தியில் வெளியாகி, தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்த 'மெட்ராஸ் கபே' படத்தின் நாயகியாக அறிமுகமானவர்தான் ராக்ஷி கண்ணா. அடுத்து அவரை தெலுங்கு உலகம் அரவணைத்துக்கொள்ள தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துவந்த ராக்ஷி கண்ணா, தற்போது தமிழில் சித்தார்த் ஜோடியாக 'சைத்தான் கி பச்சா' மற்றும் அதர்வா ஜோடியாக 'இமைக்கா நொடிகள்' படத்திலும் நடித்து வருகிறார்.. இந்தநிலையில் தான் அவருக்கு சூப்பர்ஸ்டார் மோகன்லால் படம் மூலமாக மலையாளத்தில் நுழையும் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது..
இந்தப்படத்தில் ஏற்கனவே தமிழில் இருந்து விஷாலும் ஹன்ஷிகாவும் தெலுங்கில் இருந்து ஸ்ரீகாந்தும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க இணைந்துள்ள நிலையில் இப்போது ராக்ஷி கண்ணாவும் இணைந்துள்ளார். தனது படங்களில் எப்போதுமே அனைத்து நடிகர்களுக்கும் சம வாய்ப்பு தரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். 'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்தப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment