Friday, March 24, 2017

ரூ.130 கோடிக்கு விற்பனையான ‛டியூப்லைட்'


ரூ.130 கோடிக்கு விற்பனையான ‛டியூப்லைட்'



24 மார்,2017 - 12:15 IST






எழுத்தின் அளவு:








‛சுல்தான்' படத்தை தொடர்ந்து சல்மான் நடிக்கும் படம் ‛டியூப்லைட்' கபீர்கான் இயக்குகிறார். சல்மான் உடன் சீனாவை சேர்ந்த நடிகை ஒருவரும் நடிக்கிறார். ஒரு உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான விநியோக உரிமையும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், பிரபல என்.ஹெச்., ஸ்டுடியோஸ் சுமார் ரூ.130 கோடி கொடுத்து ‛டியூப்லைட்' படத்திற்கான விநியோக உரிமையை வாங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஷாரூக்கானின் ‛தில்வாலே' படம் தான் அதிகபட்சமாக ரூ.125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதை, சல்மானின் ‛டியூப்லைட்' முறியடித்துள்ளது. டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


0 comments:

Post a Comment