Friday, March 24, 2017

அசோகமித்ரனின் எழுத்து காலம் கடந்து வாழும் - கமல் இரங்கல்









அசோகமித்ரனின் எழுத்து காலம் கடந்து வாழும் - கமல் இரங்கல்



24 மார்,2017 - 11:47 IST






எழுத்தின் அளவு:








பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோகமித்திரன், 85, நேற்று மரணமடைந்தார். சென்னை, வேளச்சேரி பாபா கார்டன் பகுதியில் உள்ள, மகன் ரவி வீட்டில் வசித்து வந்த அசோகமித்திரன், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், வீடு திரும்பிய அவர், திடீரென மரணம் அடைந்தார். அசோகமித்திரனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது... ‛‛திரு.அசோகமித்ரனின் எழுத்து, அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான். நன்றி அமரர் அனந்துவிற்கு'' என்று கூறியுள்ளார்.




Advertisement








பனி மலையில் அஜித்: விவேகம் புதிய ஸ்டில் லீக்பனி மலையில் அஜித்: விவேகம் புதிய ... வழக்கு மேல் வழக்கு...! - கமலுக்கு தொடருது சிக்கல் வழக்கு மேல் வழக்கு...! - கமலுக்கு ...










0 comments:

Post a Comment