Friday, March 24, 2017

மிருதங்கம் கற்கிறார் ஜி.வி.பிரகாஷ்


மிருதங்கம் கற்கிறார் ஜி.வி.பிரகாஷ்



24 மார்,2017 - 11:30 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். பாலா, வெற்றிமாறன், ராஜீவ்மேனன் என முக்கியமான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம் என்ற படத்தில் இசை கலைஞராகவே நடிக்கிறார். இசை பற்றிய படம் என்பதால் மற்ற படங்களை விட இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவரது தாய்மாமன் ஏ.ஆர்.ரகுமான்தான் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மிருதங்க கலைஞராக நடிக்கிறார். நவீன இசை கருவிகள் பெருகிவிட்ட காலத்தில் ஒரு மிருதங்க இசை கலைஞன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதையாம். ஜி.பி.பிரகாஷ் குமாருக்கு நவீன இசை கருவிகளை இசைக்கத் தெரியும். மிருதங்கம் அந்த அளவிற்கு தெரியாது. அவர் முறைப்படி அதனை கற்கவில்லை. இதனால் தற்போது பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனிடம் மிருதங்கம் கற்று வருகிறார்.


0 comments:

Post a Comment