Wednesday, March 1, 2017

ஏப்.,2-ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் : இறுதிப்பட்டியில் வெளியீடு


ஏப்.,2-ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் : இறுதிப்பட்டியில் வெளியீடு



01 மார்,2017 - 20:18 IST






எழுத்தின் அளவு:








சென்னை:தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு டி, சிவா, விஷால் , கேயார் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்

2017_19 ம் ஆண்டுக்கான தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஏப்ரல்2 ல் சென்னை அண்ணா நகர் கந்தசாமி கல்லூரியில் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தேர்தல் அதிகாரியாக இரு ந்து தேர்தலை நடத்துகிறார். வேட்பு மனு தாக்கல், பரிசீலனை முடி ந்ததை யொட்டி நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலை நீதிபதி வெளியிட்டார்.

அதன்படி தலைவர் பதவிக்கு டி.சிவா, நடிகர் விஷால், கேயார்,ராதாகிருஷ்ணன், கலைப்புலி ஜி சேகரன் ஆகிய 5 பேரும், 2 செயலாளர் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல்ராஜா, அழகப்பன், ஜே எஸ். சதீஷ்குமார், கதிரேசன், மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகிய 7 பேரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர் பிரபு, பாபுகனேஷ், எஸ் ஏ.ச ந்திரசேகரன், விஜயமுரளி ஆகியோரும், 2 துணை தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கவுதம்மேனன், ராஜன், சுரேஷ், பவித் ரன், ஏ.எம் ரத்னம், ரங்கா ரெட்டி, பி.டி செல்வகுமார் ஆகிய 8பேரும், 21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 86 பேரும் போட்டியிடுகின்றனர்.

இறுதி பட்டியல் வெளியாகிவிட்டதால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது


0 comments:

Post a Comment