மராத்திய மக்களுக்காக படம் தயாரிக்கும் சோனு சூட்
01 மார்,2017 - 14:58 IST

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பிரபலமான நடிகர் சோனு சூட். சமீபத்தில் இவர் ஜாக்கி சானுடன் இணைந்து குங்குபூ யோகா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்திய-சீன கூட்டு தயாரிப்பாக இப்படம் வெளிவந்தது. தற்போது சில படங்கள் கைவசம் வைத்திருக்கும் சோனு சூட், அடுத்தப்படியாக மராத்திய மொழியில் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்து, அதில் நடிக்கவும் உள்ளார்.
இதுப்பற்றி சோனு சூட் கூறியதாவது..."மராத்திய படம் ஒன்றை நான் தயாரிக்க உள்ளேன். பஞ்சாபில் இருந்து இன்ஜினியரிங் படிப்பதற்காக தான் நாக்பூர் வந்தேன். மராத்திய மக்களுக்கு கண்டிபாக ஏதாவது செய்வேன் என்று வாக்களித்தேன் அதனால், அவர்களுக்காக நான் ஒரு படம் தயாரிக்கிறேன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நான் நடித்துள்ளேன். தற்போது இரண்டு எழுத்தாளர்கள் கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கதை எனக்கும் பிடித்துள்ளது. நான் நடிக்கும் இந்தப்படத்தில் நிச்சயம் ஒரு சமூக செய்தி இருக்கும், இந்தாண்டில் படப்பிடிப்பை துவக்க எண்ணியுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment