Wednesday, March 1, 2017

ரஜினிகாந்த்திற்கு ஜோடி, வித்யா பாலன் பதில் என்ன ?


ரஜினிகாந்த்திற்கு ஜோடி, வித்யா பாலன் பதில் என்ன ?



01 மார்,2017 - 17:38 IST






எழுத்தின் அளவு:








'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இருவரும் மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் நாயகன் என்றதும் அடுத்த உடனே அவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும், 'கபாலி' படம் போலவே வயதான கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

படத்தின் முதல் பார்வை வெளிவரும் போதுதான் ரஜினிகாந்த் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைச் சொல்வார்கள். அதுவரை அவை அனைத்துமே சஸ்பென்சாகவே இருக்கும். ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எப்படியும் இந்த மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

ரஜினிகாந்தின் ஜோடியாக ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான வித்யா பாலன் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின. நேற்று மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் வித்யா பாலனிடம் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கப் போகிறீர்களாமே என்று நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வித்யா பாலன், “விரைவில் அது பற்றி தெரியும்” என பதிலளித்திருக்கிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் வித்யா பாலன் அது பற்றி நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வித்யா பாலன் முதன் முதலில் 'மனசெல்லாம்' என்ற தமிழ்ப் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக சில நாட்கள் நடித்தார். அதன் பின் அவரை அந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக த்ரிஷாவை நாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள். அதன் பின் தமிழ் சினிமா பக்கமே வரக் கூடாது என்ற வைராக்கியத்தில் வித்யா பாலன் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், இப்போது ரஜினிகாந்திற்காக அவர் நடிக்க சம்மதித்திருக்கலாம் என்றே தெரிகிறது.


0 comments:

Post a Comment