நயன்தாரா மறுப்பு - காஜலை ஓகே செய்த இயக்குநர்
01 மார்,2017 - 14:24 IST

எல்ரெட் குமார் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் - கவலை வேண்டாம். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த கவலை வேண்டாம் படம் படு தோல்வியடைந்தது. கவலை வேண்டாம் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் டீகே. அவர் சொன்ன கதையைக் கேட்டு முதலில் நடிக்க ஓகே சொன்னார் நயன்தாரா.
இந்நிலையில்..., 'கவலை வேண்டாம்' படம் வெளியாகி தோல்வியடைந்ததால் டீகே இயக்கத்தில் நடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் நயன்தாரா. இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால், உங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை என்று டீகேயிடம் சொன்னாராம். நயன்தாராவின் திடீர் மனமாற்றம் டீகேயை கவலையடைய வைத்தது.
இதனால் அப்செட்டாகி இருந்த டீகே பிறகு சுதாரித்துக் கொண்டு, 'கவலை வேண்டாம்' கதாநாயகியான காஜல் அகர்வாலை அணுகி இருக்கிறார். கதையைப் பற்றி அலட்டிக் கொள்ளாத காஜல் அகர்வால், ஒன்றரை கோடி சம்பளம் தருவதாக சொன்னதை கேட்டு 'ஓகே' சொல்லிவிட்டார். இந்தப் படத்திற்கு டீகே கதை, திரைக்கதை எழுத வேறொருவர் இப்படத்தை இயக்குவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இப்போது இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளளார்.
0 comments:
Post a Comment