Wednesday, March 1, 2017

‘நான் வரி கட்டுகிறேன்; நாட்டை விட்டு ஓடமாட்டேன்…’ குஷ்பூ

actress khushbooசினிமா, டிவி நிகழ்ச்சிகள், அரசியல் என அனைத்திலும் வெற்றி பவனி வருபவர் நடிகை குஷ்பூ.


இவரது பாஸ்போர்ட் வரும் 2022ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.


இந்நிலையில், அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட புதிதாக சில பக்கங்களை இணைக்க வேண்டி, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியை அணுகியுள்ளார்.


ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குஷ்பு மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குஷ்பு வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.


இதுகுறித்து குஷ்பூ கூறியதாவது…


‘நான் இந்தியாவில் வசிக்கிறேன். என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள்.


அவர்களை விட்டு நான் ஓடமாட்டேன்.


25 ஆண்டுகளாக நம் நாட்டில் வரி செலுத்தி வருகிறேன்.


இந்த பிரச்சனைக்கு பின்னால் அரசியல் சதி இருக்கிறது” என்றார்.

0 comments:

Post a Comment