Wednesday, March 1, 2017

ஜி.வி.பிரகாஷின் கெட்டப்பை மாற்றுகிறார் பாலா


ஜி.வி.பிரகாஷின் கெட்டப்பை மாற்றுகிறார் பாலா



02 மார்,2017 - 10:46 IST






எழுத்தின் அளவு:








டைரக்டர் பாலா படங்களுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அதேப்போல் தனது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஸ்பாட்டுக்கு சென்றபிறகு அந்தந்த கதாபாத்திரங்களாக பக்காவாக மாற்றி விடுவார். அதோடு அந்த படங்கள் முடிகிற வரை அவர்கள் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு கெட்டப்பையே மாற்றி விடுவார் பாலா. அந்த வகையில், இதற்கு முன்பு அவரது படங்களில் நடித்த விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, சசிகுமார் ஆகிய நடிகர்களை அவர்களே நினைத்துப்பார்க்காத அளவுக்கு மாற்றி காண்பித்தார் பாலா.

இந்த நிலையில், தற்போது அவர் தொடங்கியிருக்கும் நாச்சியார் படத்திலும் அதுபோன்ற கெட்டப் மாற்றங்கள் நடக்கப்போகிறது. குறிப்பாக, இந்த படத்தில் வீரப்பெண்மணியாக நடிக்கும் ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஆனால், கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் நெகடீவ் ரோலில் அதாவது சைக்கோ கொலையாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் இதுவரை ஜாலிப்பையனாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷை நாச்சியார் படத்தில் படு பயங்கரமானவராக காட்டப்போகிறார் பாலா.


0 comments:

Post a Comment