Wednesday, March 1, 2017

ஜல்லிக்கட்டைப்போன்று பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் மக்கள் ஒன்று சேர வேண்டும்! -நடிகர் அசோக்


ஜல்லிக்கட்டைப்போன்று பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் மக்கள் ஒன்று சேர வேண்டும்! -நடிகர் அசோக்



02 மார்,2017 - 11:52 IST






எழுத்தின் அளவு:








முருகா, பிடிச்சிருக்கு, கோழிக்கூவுது உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் அசோக். தற்போது அதர்வா நாயகனாக நடிக்கும் ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் பாசிட்டிவ், நெகடீவ் கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வியோல் என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும் படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார்.

அதுகுறித்து அசோக் கூறுகையில், தற்போது நான் அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் குமரன் என்றொரு இயக்குனர், என்னை வியோல் என்றொரு குறும் படத்தில் நடிக்க அழைத்தார். இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட அந்த கதையைக்கேட்டதும் கலங்கி விட்டேன். பெரிய பெண்கள் தொடங்கி சிறுமிகள், குழந்தைகள் என காமக் கொடூரன்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. பக்கத்து வீட்டு நபர்களைகூட நம்ப முடியவில்லை. பெண்களை பாதுகாப்பது என்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் இந்த விழிப்புணர்வு படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதில் ஒரு சிறுமிக்கு அண்ணனாக நடிக்கிறேன். இந்த வியோல் குறும் படத்தையும் நானே தயாரிக்கிறேன்.

மேலும், ஜல்லிக்கட்டு விசயத்தில் தமிழகமே ஒன்றிணைந்தது போன்று இந்த மாதிரியான பாலியல் சம்பவங்களுக்கு எதிராகவும் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். சமூக விரோதிகளை விரட்டியடிக்க வேண்டும். இந்த எண்ணம் ஒவ்வொருத்தரின் மனதிலும் வர வேண்டும். அதனால் இந்த குறும்படத்தை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன். இந்த வியோல் குறும்படம் விரைவில் வெளியாகிறது என்கிறார் நடிகர் அசோக்.


0 comments:

Post a Comment