Monday, March 13, 2017

அஜித் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது - சதா


அஜித் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது - சதா



13 மார்,2017 - 17:49 IST






எழுத்தின் அளவு:








ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து அந்நியன், திருப்பதி, எதிரி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து போனதால் தற்போது சின்னத்திரைக்கு வந்துவிட்டார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர், தேவயானியுடன் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்தவாரம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் பேசிய சதா, அஜித் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாக கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... நடிகர் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை இங்கு சொல்லலாமா என்று தெரியவில்லை. அவருடன் திருப்பதி படத்தில் நடித்தேன். அப்போது அவர் மீது நிஜமாகவே எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது'' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment