மேஜர் ரவி டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி..!
13 மார்,2017 - 15:23 IST

ஒரு சிறிய பிரேக் விடுகிறார் மலையாள இயக்குனர் மேஜர் ரவி.. டைரக்சன் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்ககிறது.. அப்புறம் எதற்கு பிரேக் என கேட்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது.. மேஜர் ரவியை பொறுத்தவரை அவர் ராணுவ படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனால் அவரது படங்களில் காதலுக்கென பத்து சதவீதம் முக்கியத்துவம் ஒதுக்கினாலே ஆச்சர்யம் தான்.. அப்படிப்பட்ட மேஜர் ரவி இப்போது கூட மோகன்லாலை வைத்து '1971; பியாண்ட் பார்டர்ஸ்' என்கிற ராணுவ பின்னணி சார்ந்த படத்தைத்தான் இயக்கியுள்ளார்..
இந்தப்படத்துடன் தற்காலிகமாக ராணுவ கதைகளுக்கு பிரேக் விட முடிவு செய்துள்ள மேஜர் ரவி அடுத்ததாக காதல் ரசம் சொட்டும் படம் ஒன்றை இயக்க முடிவுசெய்துள்ளாராம்.. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப்படத்தின் கதாநாயகனாக நிவின்பாலி நடிக்க இருக்கிறார்.. இந்தப்படத்தை மேஜர் ரவியும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜானும் (சமீபத்தில் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து விலகினாரே அவர்தான்) இணைந்து தயாரிக்க உள்ளார்கள்.
0 comments:
Post a Comment