‛ஜெயிக்கிற குதிரை'யில் காமெடி சீனி வெடி போல் பட பட என வெடிக்கும் - ஷக்தி சிதம்பரம்
14 மார்,2017 - 12:23 IST

இங்கிலீஸ்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். இவர் இயக்கும் புதிய படம் ஜெயிக்கிற குதிர. இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, லிவிங்ஸ்டன், யோகிபாபு, படவா கோபி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார், கே.ஆர்.கவின் சிவா இசை அமைக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம்.
இந்து படத்தில் ரோஜா தொப்புளில் தேளை விட்டார் பிரபுதேவா, சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யா தொப்புளில் பம்பரம் விட்டார் விஜயகாந்த், ஒரு படத்தில் ஹீரோயின் தொப்புளில் ஆம்ளைட் போட்டார்கள், மண்ணை அள்ளிப் போட்டார்கள். இந்தப் படதில் ஹீரோ ஜீவன், ஹீரோயின் தொப்புளில் லட்டை உருட்டி விளையாடுகிறார். அந்த ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுஒரு புறம் இருக்க படத்தை பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் என்ற சொல்கிறார் என்று பார்க்கலாம். "ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்று தான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் ஜெயிக்க நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தார் எப்படி வெற்றி பெற்றார் என்பதை காமெடியாகவும், வித்தியாசமாகவும், சென்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளோம். பொதுவாகவே எனது படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த படத்திலும் காமெடி இரண்டரை மணி நேரம் சிவகாசி சீனி வெடி போல பட பட வென இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாக உருவாக்கி இருக்கிறேன். படம் விரைவில் வெளியாக உள்ளது" என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
0 comments:
Post a Comment