சிபிக்கு ஜோடியான நிகிலா விமல்
14 மார்,2017 - 15:32 IST

கதாநாயகி என்றாலே கவர்ச்சி நாயகி என்ற நிலைதான் தற்போது உள்ளது. அதனால் குடும்பப் பாங்கான முக அமைப்பு கொண்ட நடிகைகள் திரையுலகில் தாக்குப்பிடிப்பதே கஷ்டமாகிவிட்டது. 'வெற்றிவேல்', 'கிடாரி' ஆகிய படங்களில் சசிகுமாருடன் இணைந்து நடித்தவர் நிகிலா விமல். கேரளத்து இறக்குமதியான இவர் ஹோம்லியான கேரக்டருக்கு மட்டுமே பொருத்தமானவர் என்பதால், கவர்ச்சியுடன் கூடிய கதாபாத்திரங்கள் இவரை தேடி வரவில்லை. அதனால் தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் போன நிலையில் மீண்டும் மலையாளப்படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்தார்.
இந்நிலையில் சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு நிகிலாவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை வில்லேஜ் கேரக்டர்களில் நடித்த நிகிலா விமலுக்கு இந்தப்படத்தில் சிட்டியை சேர்ந்த மாடர்ன் கேரக்டராம்! 'கட்டப்பாவை காணோம்' படத்தை தொடர்ந்து சிபி சத்யராஜ் 'சத்யா' என்ற படத்தில் நடித்து வருகுகிறார். சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்தை அடுத்து மற்றுமொரு படத்தில் சிபி சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தான் நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
0 comments:
Post a Comment