Tuesday, March 14, 2017

குழந்தைகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட நிசப்தம்


குழந்தைகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட நிசப்தம்



14 மார்,2017 - 12:01 IST






எழுத்தின் அளவு:








சமீபத்தில் வெளிவந்த படம் நிசப்தம். மிராக்கிள் பிலிம்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்திருந்தார். மைக்கேல் அருண் இயக்கி இருந்தார். இந்தப் படம் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறை பற்றிய படம். தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஏஞ்சலின் குழந்தைகளுக்கு இலசவமாக திரையிட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அதன்படி, சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் படம் குழந்கைளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. பின்னர் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதம் பவுண்டேஷன் அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

படம் முடிந்து வெளியில் வந்ததும், குழந்தைகள் ஒரு படம் பார்த்த மகிழ்சியில் வந்தார்கள். பெற்றவர்கள் கண்ணீருடன் வந்தார்கள். நிகழ்ச்சியில் நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர், முதன்மை செயல் இயக்குநர் பிரபாலா சுபாஷ், பேபி ​​சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment