போஜ்புரி நடிகராக நடிக்கும் பர்கான் அக்தர்
14 மார்,2017 - 13:57 IST

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பர்கான் அக்தர், தற்போது ‛லக்னோ சென்ட்ரல்' என்ற படத்தில் நடிக்கிறார். அவருடன் டயானா பென்டி முக்கிய ரோலில் நடிக்கிறார். ரஞ்சித் திவாரி இயக்குகிறார், நிகில் அத்வானி இயக்குகிறார். ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, பர்கான் அக்தரின் கேரக்டர் என்ன மாதிரி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, படத்தில் பர்கான், போஜ்புரி நடிகராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லக்னோ சென்ட்ரல் படம் வருகிற செப்., 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment