Thursday, March 23, 2017

டோராவுக்காக நயன்தாரா கொடுத்த ஐடியா!


டோராவுக்காக நயன்தாரா கொடுத்த ஐடியா!



24 மார்,2017 - 09:54 IST






எழுத்தின் அளவு:








தான் செலக்ட் பண்ணி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களைத் தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்துள்ள டோரா படத்திற்காக அதிகப்படியான மெனக்கெட்டுள்ளார் நயன்தாரா.

இதுபற்றி டோரா பட டைரக்டர் தாஸ் ராமசாமி கூறுகையில், இந்த டோரா படத்தின் கதையை நயன்தாராவிடம் சொன்னதுமே முழுமையாக அதில் இப்ரஸ்ஸாகி விட்டார். கதையைக்கேட்டு முடித்தவர், சில காட்சிகளில் தனது சார்பில் சில திருத்தங்களை செய்யச்சொன்னார். அதோடு, இந்த கேரக்டரை இந்த கோணத்தில் நடிக்கலாம் என்று கூறியவர், அந்த கதாபாத்திரத்திற்காக எந்த மாதிரியான உடை அணியலாம். எந்த மாதிரியான கண்ணாடி அணியலாம் என ஒவ்வொரு விசயமும் நயன்தாரா சொன்ன ஐடியாவில்தான் நடந்தது. அதேபோல் நடிப்பிலும் இதுவரையில்லாத மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்திருக்கும் நயன்தாராவினால்தான் டோரா படத்தின் அவுட்புட் சிறப்பாக வந்துள்ளது என்கிறார்.


0 comments:

Post a Comment