கட்டமராய்டு பட ரீலிஸிற்கு லீவு விட்ட ஐடி கம்பெனி
24 மார்,2017 - 09:28 IST

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இன்று(மார்ச் 24) உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை இயக்குனர் டோலி இயக்கியுள்ளார். கட்டமராய்டு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் யூடியூப்பில் வெளிவந்து ஹிட் அடித்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று கட்டமராய்டு பட ரிலீஸை முன்னிட்டு நிறுவனத்திற்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அதற்கு பதிலாக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற வேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரத் மாரர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கட்டமராய்டு படத்தின் டிக்கெட்டுகள் முதல் மூன்று நாட்களுக்கு விற்று தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் கட்டமராய்டு படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment