மஞ்சு வாரியர் படத்துக்கு நடிக்க ஆள் தேடும் துல்கர் சல்மான்..!
15 மார்,2017 - 15:21 IST

துல்கர் சல்மானை வைத்து 'ஏபிசிடி' மற்றும் 'சார்லி' என இரண்டு படங்களை இயக்கிவர் தான் மலையாள இயக்குனர் மார்ட்டின் பரக்கத்.. கடந்த 2015ல் வெளியான 'சார்லி' திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய கௌரவங்களையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது மறுக்க முடியாத உண்மை.. இதுவரை மூன்றே படங்களை இயக்கியுள்ள மார்ட்டின் அதில் மம்முட்டியை வைத்து ஒன்றையும் துல்கரை வைத்து இரண்டையும் இயக்கியுள்ளார்.. அடுத்தததாக அவர் இயக்கவுள்ள படம் கதாநாயகியை மையப்படுத்தியது..
அதனால் மஞ்சு வாரியாரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்ட மார்ட்டின், படத்தில் நடிக்க 13-15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளை தேடிக்கொண்டு இருக்கிறார்.. இதற்காக சோஷியல் மீடியாவில் விளம்பரமும் கொடுத்துள்ளார்.. இந்த விளம்பரத்தை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்துள்ள துல்கர் சல்மான், “பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்.. மார்ட்டின் சேட்டன் படத்தில் நடிக்க ஆட்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்.. நிச்சயம் இது ஒரு ஸ்பெஷலான படம்.. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment