Wednesday, March 15, 2017

அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி

அஜித் நடிப்பில் வெளிவந்த ’முகவரி’ படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’, பரத்தை வைத்து ‘நேபாளி’, ஷாமை வைத்து ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டாலும், வி.இசட்.துரைக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை வாரி வழங்கவில்லை.

இந்நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கிடைத்துள்ளது. வி.இசட்.துரை அடுத்ததாக சமுத்திரகனி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நிறைய பேரை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார். நிதிஷ்-பிரகாஷ் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். சுதர்சன் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment