காதலும், மோதலும் கலந்த விருந்து!
16 மார்,2017 - 00:30 IST

படத்திற்கு காற்று வெளியிடை என, பெயர் சூட்டப்பட்டதுமே, பக்கா காதல் படமாகத் தான் இருக்கும் என, மணிரத்னம் ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான அந்த படத்தில் டிரெயிலரை பார்த்தவர்கள், ஆச்சரியத்தில் உறைந்து போயினர். ராணுவம், விமானம், வெடி குண்டு என, செமத்தியான ஆக் ஷன் படங்களுக்கான அடையாளம், அதில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், மணிரத்னம் படங்களுக்கே உரிய, அழகிய காதல் காட்சிகளும் டிரெயிலரில் உள்ளன. 'மொத்தத்தில் இந்த படம், ஆக் ஷனும், மோதலும் கலந்த விருந்தாக இருக்கும்' என்கிறது, கோலிவுட்.
0 comments:
Post a Comment